திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ ஆழ்வார் திருமஞ்சனம்

By செய்திப்பிரிவு

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 11-ம் தேதி பிரமோற்சவம் தொடங்க உள்ளதால், நேற்று ஆகம சாஸ்திரங்களின்படி கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 11-ம் தேதி வருடாந்திர (கார்த்திகை மாத) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இவ்விழா கரோனா பரவல் காரணமாக ஏகாந்தமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் தாயாரின் வீதி உலா, தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி, நேற்று ஆகம விதிகளின்படி கோயில் முழுவதும் சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர், பச்சை கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் தாயார் சன்னதி உட்பட உப சன்னதிகள், பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம் போன்ற அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பசந்த் குமார், உதவி நிர்வாக அதிகாரி ஜான்சி ராணி உட்பட அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்