புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் உத்தராகண்டில் இருந்து ஒரு உறுப்பினர் பதவிக்கும் வரும் 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் உ.பி.யில் பாஜக சார்பில் 8 பேரும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் மனு தாக்கல் செய்தனர். உத்தராகண்டில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு பாஜக சார்பில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. 11 இடங்களுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் 11 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த 11 பேரில் பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 92 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் காங்கிரஸின் பலம் 38 ஆக குறைந்துள்ளது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் சேர்த்தே காங்கிரஸுக்கு 89 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago