பெங்களூரு: உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்வதற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை சுட்டிக்காட்டி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவதை ஏற்க முடியாது. திருமணத்துக்காக மத மாற்றம் செய்வதை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும்'' என அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக ஆளும் ஹரியாணா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களும் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி கூறும்போது, “கர்நாடகாவில் பெண்களின் சுய மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் செயல்படுவதை அரசு பொறுத்துக் கொள்ளாது. விரைவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும். அதன் மூலம் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும். எங்களுக்கு முன் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் இந்த சட்டத்தை கொண்டுவந்தால், அதை முன் மாதிரியாக கொண்டு கர்நாடகா சட்டம் இயற்றும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago