கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோர் எண் ணிக்கை 91.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 38,310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,67,623 ஆக உயர்ந்துள்ளது. இதில் 76,03,121 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 58,323 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 5,41,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,23,097 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 4,009 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,87,784 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,24,304 பேர் குணமடைந்துள்ளனர். 1,19,352 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 2,576 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,29,640 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,73,595 பேர் குணமடைந்துள்ளனர். 44,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திராவில் புதிதாக 1,916 பேரிடம் வைரஸ் தொற்றுகண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,27,882 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,98,625 பேர் குணமடைந்துள்ளனர். 22,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,777 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,85,609 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,55,498 பேர் குணமடைந்துள்ளனர். 23,035 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரளாவில் நேற்று 6,862 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,51,131 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,64,745 பேர் குணமடைந்துள்ளனர். 84,713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,559 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago