மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் பேரவையில் 4 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்திக்க சென்றனர். ஆனால், அவர்களைசந்திக்க குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராஜ் காட்டில் இன்று தர்ணா போராட் டத்தில் ஈடுபடவுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago