2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் நடந்த பிஹார் தேர்தலில் 54.15% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 54.15 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிஹார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகியதேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டிநிலவுகிறது. லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிடுகிறது.

பிஹாரில் முதல்கட்டமாக கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 2-ம் கட்டமாக 94தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 2.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக41,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா தடுப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன.

இரண்டாம் கட்ட தேர்தலில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத்தின் மகனும் அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஹஸன்பூரில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா, பங்கிபூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார். முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 4 அமைச்சர்களும் 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

பைகுந்த்பூர் தொகுதி பாஜகவேட்பாளர் மிதிலேஷ் திவாரிபல்வேறு வாக்குச்சாவடிகளுக்குசென்று ஆய்வு செய்தார். அப்போது கோபால்கன்ஜ் பகுதியில்அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரும் பாஜக மூத்த தலைவர்களும் காயமடைந்தனர்.

பாட்னாவின் திக்ஹா வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் ஆதரவாளர்களுக்கும் பாரதிய சபலாலாக் வேட்பாளர்மாயாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 7 மணி நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதிவானது.

பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள ஹத்துவா தொகுதியில், சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி சார்பில்திருநங்கையான முன்னா கின்னர்(எ) ராம்தர்ஷன் பிரசாத் போட்டியிடுகிறார். பிஹார் பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டியிடுவது இதுவே முதல்முறை ஆகும். இங்கு சமூகநலத் துறை அமைச்சர் ராம் சேவக்சிங் ஐக்கிய ஜனதா தளம்சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். மெகா கூட்டணி சார்பில்ஆர்ஜேடியின் ராஜேஷ் சிங் குஷ்வாஹா நிறுத்தப்பட் டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்