காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 200 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் நேற்று முன்தினம் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் சைபுல்லா சுட்டுக் கொல்லப்பட்டார். ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே இதன் தலைவராக இருந்து வந்த ரியாஸ் அகமது நைகூ கடந்த மே மாதம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இது காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த இரண்டு தீவிரவாதத் தலைவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையில் காஷ்மீரில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம், சோபியான், புல்வாமா மாவட்டங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்