வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து சரிதா நாயர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவரை எதிர்த்து சோலார் பேனல் ஊழல் வழக்கின் குற்றவாளியான சரிதா நாயரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி என்பதால் அவரது வேட்பு மனு ஏற்கப்படவில்லை.
இந்நிலையில், தனது வேட்பு மனு முறையற்ற வகையில் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் சரிதா நாயர் வழக்கு தொடர்ந்தார். அதில், வயநாடு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று பரிசீலித்த நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago