புதுடெல்லி: மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தாப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய மாநில காங்கிரஸ் தலைவரான கமல்நாத், அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்தி தேவியை தரக்குறைவாக பேசியது சர்ச்சையை எழுப்பியது
இதுகுறித்த புகாரின் பேரில், கமல்நாத்தை காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்திலிருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் கூறும்போது, “காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து கமல்நாத்தை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யார் நட்சத்திர பிரச்சாரகர் என்று முடிவு செய்வது கட்சித் தலைமையா? அல்லது தேர்தல் ஆணையமா? தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago