தப்லீக் வெளிநாட்டு உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் வெளிநாட்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர். நாட்டில் கரோனா வைரஸ் பரவ இந்த மாநாடும் ஒரு காரணம் என புகார் எழுந்தது. இதையடுத்து விசா விதிகளை மீறியதாக தப்லீக் வெளிநாட்டு உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 10 ஆண்டுகள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதிடும்போது, “அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 8 மனுதாரர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விண்ணப்பம் தொடர்ந்து நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றங்கள் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்