பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேந்திர குமார் யாதவுக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம்ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, ஆயிரக்கணக்கான கரசேவகர் களால் இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது பதவிக் காலத்தின் கடைசி நாளில் தீர்ப்பு கூறினார்.
இத்தீர்ப்பில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்படகுற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சுரேந்திர குமார் யாதவ் கடந்த செப்டம்பர் 30-ம்தேதி உச்ச நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தில், மிகவும் உணர்வுபூர்வமான வழக்கில் தான் தீர்ப்பு வழக்கியிருப்பதால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்தக் கடிதம் தொடர்பாக, நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், நவீன் சின்கா, கிருஷ்ண முராரிஆகியோரைக் கொண்ட அமர்வுநேற்று விசாரணை நடத்தியது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “எஸ்.கே.யாதவின் செப்டம்பர் 30-ம் தேதியிடப்பட்ட கடிதத்தை ஆராய்ந்தோம். அவருக்கு பாதுகாப்பு தொடர வேண்டியது அவசியம் என நாங்கள் கருதவில்லை” என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago