பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் மானமுள்ளவராக இருந்தால் உயிரிழந்து விடுவார்: கேரள காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

By செய்திப்பிரிவு

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன்தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசும்போது, ‘‘சோலார்பேனல் விவகாரத்தில் பாலியல்தொழிலாளியான ஒரு பெண்ணைவைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பினராயி விஜயன் பேச வைத்தார். பாலியல் தொழில் செய்பவரை வைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கட்டுக்கதைகளைக் கூறிதப்பித்துக் கொள்ள முதல்வர் பினராயி விஜயன் நினைக்கக் கூடாது. ஒரு பெண் ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினால் அதைப் புரிந்து கொள்ள முடியும். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் மானமுள்ளவராக இருந்தால் இறந்துவிடுவார்’’ என்றார்.

ராமச்சந்திரனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, ‘‘எனது பேச்சு பெண்களுக்கு எதிரானது என்று சிலர்கூறுகின்றனர். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’‘ என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாநில மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளது. ராமச்சந்திரன்கோரியுள்ள மன்னிப்பு உண்மையானதாக இல்லை என்றும் இதுபோன்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்றும் மாநில மகளிர்ஆணைய தலைவர் எம்.சி. ஜோசபைன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்