மாநில அரசுகளுக்கு 2-வது தவணையாக ஜிஎஸ்டி இழப்பீடு

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம்அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் முடங்கியது. இதனால்வரி வருவாய் பாதித்ததால் மத்திய அரசால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்க முடியவில்லை.

எனினும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1.1 லட்சம் கோடி இழப்பீட்டு தொகையை கடன் பெற்று வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி கடந்த வாரம் 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதசங்களுக்கு முதல் தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது. இந்நிலையில், 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு 2-வது தவணையாக மேலும் ரூ.6000 கோடி நேற்று வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்