‘லவ் ஜிகாத்தை' தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 7 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரபிரச்சாரம் மேற்கொண்டார். லக்னோ அருகே ஜூவான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எங்கள் சகோதரிகள், மகள்கள்‘லவ் ஜிகாத்தால்' பாதிக்கப்படு கின்றனர். போலியான பெயர், அடையாளத்தை பயன்படுத்தி எங்கள் சகோதரிகள் ஏமாற்றப் படுகின்றனர். எங்கள் பெண்களுக்கு இடையூறு விளைவிப்பவர் களுக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத்உயர் நீதிமன்றமே உத்தரவிட் டுள்ளது. ‘லவ் ஜிகாத்தை' தடுக்கபுதிய சட்டம் இயற்றப்படும். லவ்ஜிகாத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அண்மையில் அடிக்கல் நாட்டினார். கோயில்கட்டுமானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் உலகத்துக்கே முன்னோடியாக செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
ஹரியாணா அரசு பரிசீலனை
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago