கரோனாவால் பாதிக்கப்பட்ட 5.7 லட்சம் பேருக்கு சிகிச்சை நாடு முழுவதும் 75 லட்சம் பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5.7 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 46,963 பேருக்கு கரோனா தொற்று ஏற் பட்டது. தினசரி கரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக 50,000-க்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நாட் டில் இதுவரை 81,84,082 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 74,91,513 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 58,684பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மருத்துவமனைகளில் 5,70,458 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த3 நாட்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்துக்குள் உள்ளது. ஒரே நாளில் 470 பேர்உயிரிழந்தனர். இது கடந்த 4 மாதங்களில் பதிவான தினசரி உயிரிழப்புகளில் மிகவும் குறைவானதாகும்.

தேசிய அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 5,548 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 16,79,406 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 15,10,353 பேர் குணமடைந்துள்ளனர். 1,24,142 பேர் சிகிச்சையில் உள்ளனர். 43,911 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கர்நாடகா 3-வது இடத்தில் இருந்தது. அந்த மாநிலத்தில் புதிதாக 3,014 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,23,412 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கர்நாடகா 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை 7,57,208 பேர் குணமடைந்துள்ளனர். 55,036 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,168 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,783 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 8,23,348 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,92,083 பேர் குணமடைந்துள்ளனர். 24,575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,690 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,781 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் 4,81,863 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,51,070 பேர் குணமடைந்துள்ளனர். 23,768 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,025 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 7,025 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 4,40,130 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3,48,835 பேர் குணமடைந்துள்ளனர். 89,675 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக 5,062 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3,86,706 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 3,47,476 பேர் குணமடைந்துள்ளனர். 32,719 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,511 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் 3,993 பேர், ஒடிசாவில் 1,470 பேர், தெலங்கானாவில் 1,416 பேர், பிஹாரில் 759 பேர், அசாமில் 336 பேர், ராஜஸ்தானில் 1,780 பேர், சத்தீஸ்கரில் 1,964 பேர், குஜராத்தில் 935 பேர், மத்திய பிரதேசத்தில் 669 பேர், ஹரியாணாவில் 1,743பேர், பஞ்சாபில் 500 பேர், ஜார்க் கண்டில் 474 பேர், காஷ்மீரில் 455 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்