வைஷ்ணவி தேவி கோயிலில் தினமும் 15,000 பேருக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் கரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி திறக்கப்பட்டு, நிபந்தனைகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், தினமும் 7,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.

இப்போது, கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து, ஊரடங்கு நிபந்தனைகளை காஷ்மீர் நிர்வாகம் மேலும் தளர்த்தி உள்ளது. இதையடுத்து, வைஷ்ணவி தேவி கோயிலில் ஒரு நாளைக்கு 15,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் தினமும் 15,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவியை தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதைத் தடுக்க ஆன்லைன் மூலமே தரிசனத்துக்கு அனுமதி பெற முடியும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்