8 மாதத்துக்கு பிறகுஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு வசூலாகி உள்ளது.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,05,155 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி ரூ.19,193 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.5,411 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.52,540 கோடி, செஸ் ரூ.8,011 கோடி வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செஸ் தொகையில் ரூ.932 கோடி இறக்குமதி பொருட்களுக்கான வரி மூலம் கிடைத்தது. அக்டோபர் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களின் எண்ணிக்கை 80 லட்சமாகும்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான ஜிஎஸ்டி-யை விட 10 சதவீதம் அதிகமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்