பாஜக வாக்குறுதியில் தேர்தல் விதிமீறல் இல்லை தேர்தல் ஆணையம் தகவல்

By செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கள்கட்சி வெற்றி பெற்றால், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் இதற்காக பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என்று தெரி வித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேர்தல் அறிக்கைக்கான நடத்தை நெறிமுறைகள், விதிமுறைகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. நடத்தை நெறிமுறைகளின் 8-வது பிரிவின்படி இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதி தேர்தல் விதிமீறலில் வராது. தேர்தலின்போது மக்களின் நலன் சார்ந்த வாக்குறுதிகள், அறிவிப்புகளை கட்சிகள் வெளியிடுகின்றன.

இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதி அளிக்க தடை இல்லை. எனவே, பாஜகவின் வாக்குறுதி விதிமீறல் ஆகாது. எனினும், வாக்காளரிடம் செல்வாக்கை ஏற்படுத்தும் இதுபோன்ற வாக்குறுதிகளை கட்சிகள்தவிர்க்க வேண்டும்’’ என தெரி விக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்