புதுடெல்லி: மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தாப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய மாநில காங்கிரஸ் தலைவரான கமல்நாத், அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்தி தேவியை பாலியல் ரீதியாக தரக்குறைவாக பேசினார். இது அங்கு பெரும் சர்ச்சையை எழுப்பியது
இந்நிலையில், கமல்நாத்தை நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்திலிருந்து நீக்கி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று கமல்நாத் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று அவரது வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான விவேக் டாங்கா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago