கரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் 91.34% ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 48,268 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,37,119 ஆக உயர்ந்துள்ளது. இதில் 74,32,829 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 59,454 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,82,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,21,641 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 1,25,971 பேர், ஆந்திராவில் 25,514 பேர், கர்நாடகாவில் 59,518 பேர், உத்தர பிரதேசத்தில் 24,431 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கேரளாவில் நேற்று 7,983 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 91,190 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெல்லியில் புதிதாக 5,891 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. 32,363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்