புதுடெல்லி: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி நேற்று முன்தினம் பேசும்போது, "புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை" என்றார். இதன்மூலம் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசின் பங்கு இருந்தது உறுதியாகியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது, எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. குறிப்பாக, "புல்வாமா தாக்குதல் காரணமாக அதிக அளவில் நன்மை அடைவது யார்?" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் பெருமையாக பேசிய நிலையில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவரே தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி பேசி வந்த காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சியினர் கட்டாயம் மன்னிப்பு கேட்டக வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago