கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 6 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

By செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளின் எண்

ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 48,648 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்துள்ளது. இதில் 73,73,375 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 57,386 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 91.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,94,386பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதிகரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5.95 லட்சமாக இருந்தது.கடந்த 85 நாட்களில் முதல்முறையாக நோயாளிகளின் எண்ணிக்கை6 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,21,090 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,902 பேருக்கு கரோனா தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,66,668 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,94,809பேர் குணமடைந்துள்ளனர். 1,28,149 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,905 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,17,679 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,84,752 பேர் குணமடைந்துள்ளனர். 26,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 4,025பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,16,809 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,41,219 பேர் குணமடைந்துள்ளனர். 64,499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,861 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,77,895 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,46,054 பேர் குணமடைந்துள்ளனர். 24,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 6,638 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,25,122 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 3,32,994 பேர் குணமடைந்துள்ளனர். 90,565 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் புதிதாக 5,739 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3,75,753 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,38,378 பேர் குணமடைந்துள்ளனர். 30,952 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஓட்டலுக்கு செல்வது ஆபத்து

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கரோனா வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

விமான பயணத்தைவிட ஓட்டல், மளிகை கடைக்கு செல்லும்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. விமான பயணத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்போது கரோனா பரவல் கணிசமாக குறைகிறது.

விமானங்களை கிருமி நாசினிமூலம் சுத்தம் செய்வது, விமானத்தில் காற்றோட்ட வசதியை ஏற்படுத்துவது, பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் விமான பயணத்தில் வைரஸ் பரவலை தடுக்க முடியும்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்