குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் (92) நேற்று காலமானார்.
குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்நிலையில், நேற்று காலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து, சுயநினை வற்ற நிலையில் இருந்த அவரைஅகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவர் அக்சய் கிலேதார் கூறும்போது, “கேசுபாய் படேலை காப்பாற்ற முயன்றோம். ஆனால் முடியவில்லை. காலை 11.55 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவரது உயிரிழப்புக்கு கரோனா காரணம் அல்ல” என்றார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் விடுத்துள்ள இரங்கல்செய்தியில், “கேசுபாய் படேல்உயிரிழந்ததால் இந்த நாடு சிறந்த ஒரு தலைவரை இழந்துவிட்டது. அவருடைய பொது வாழ்க்கை லட்சக் கணக்கானோரின் வாழ்வைமேம்படுத்தியது” என கூறியுள்ளார்.
படேல் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த கேசுபாய் படேல், கடந்த 1995-ல் சில மாதங்கள் குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்தார். பின்னர் 1998 முதல் 2001 அக்டோபர் வரை முதல்வராக பதவி வகித்தார். 2012-ல் பாஜகவை விட்டு விலகிய படேல், குஜராத் பரிவர்தன் கட்சியை தொடங்கினார். பின்னர் அக்கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago