புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய வட மாநிலங்களில் அறுவடை முடிந்து நிலத்தில் இருக்கும் வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக மாறுகிறது. இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இவ்வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவசர சட்டத்தை நீதிமன்றம் பார்த்து பரிசீலிக்க விரும்புவதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago