புனே: மத உணர்வுகளை புண்படுத்தியதாக புனே பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் 5 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புனே பல்கலைகழத்தின் லலித் கலா கேந்திரா துறையில் நேற்று முன்தினம் மாலையில் ராம்லீலா அடிப்படையில் ஒரு நாடகம் நடைபெற்றது. இதில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லலித் கலா கேந்திரா மாணவர்களுக்கும் பல்கலை.யின் ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஏபிவிபி நிர்வாகி ஹர்ஷவர்தன் ஹர்புதே அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 295(ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் துறைத் தலைவர் பிரவீன் போல், மாணவர்கள் பாவேஷ் பாட்டீல், ஜெய் பெட்னேகர், பிரதமேஷ் சாவந்த், ரிஷிகேஷ் தால்வி, யாஷ் சிக்லே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் நேற்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago