புதுடெல்லி: ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி ராஜஸ்தான் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்பதவிக்கான போட்டியில் 2 முறை முதல்வர் பதவி வகித்துள்ள வசுந்தரா ராஜே (70) முதலிடத்தில் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அம்மாநிலத்தின் பாஜகவின் முகமாக இருந்து வருகிறார். இவர் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் செகாவத் (56), அர்ஜுன் ராம் மேக்வால் (69), கட்சியின் மாநில தலைவர் சி.பி.ஜோஷி (48), மக்களவை உறுப்பினர் சாமியார் பாலக்நாத், ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி தியா குமாரி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
ஜெய்ப்பூர் மாகாணத்தின் கடைசி மன்னர் இரண்டாம் மான் சிங்கின் பேத்திதான தியா குமாரி (52). இவரது தந்தை பவானி சிங் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். தாய் பத்மினி தேவி. கடந்த 2013-ல் பாஜகவில் சேர்ந்த தியா குமாரி, அதே ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் சவாய் மாதோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு 5.51 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
» விஜய் ஹசாரே கோப்பை ம.பி.யை வீழ்த்தியது தமிழகம்
» 2024 தேர்தலில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி உறுதி: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
இந்நிலையில் இந்த தேர்தலில் ஜெய்ய்பூரின் வித்யாநகர கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது பெயரும் முதல்வர் பதவிக்கான பரசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பாஜக மக்களுக்காக சேவை செய்கிறது என்பது பொதுமக்களுக்கு தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும், வேலை வாய்ப்பை உருவாக்கும், விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்து அரசுதான் வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago