நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களில் - 81 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களில் 81 கோடி பேருக்கு கரோனா தடுப் பூசி செலுத்தி சாதனை படைக்கப் பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதில் கேரள மாநிலத்தில் மட்டும் 19,653 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இதன்மூலம் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 78,419 ஆக அதிகரித் துள்ளது. கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 295 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45,133 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,977 குறைந்தது. இதையடுத்து தற்போது நாடு முழுவதும் 3 லட்சத்து 18,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 0.95 சதவீத மாகும். தினசரி பாதிப்பு 2.57 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 2.07 சதவீதமாகவும் உள்ளது. வாராந்திர பாதிப்பு கடந்த 87 நாட்களாக தொடர்ந்து 3 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 55.36 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை 97.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,938 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண் ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 15,105 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை 80 கோடியே 85 லட்சத்து 68,144 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 லட்சத்து 78,296 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக சில மாநில அரசுகள் புகார் கூறியதை தொடர்ந்து தடுப்பூசிகள் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தற்போது தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு மக் களுக்கு போடப்பட்டு வருகிறது. தவிர கையிருப்பும் அதிகமாக உள்ளதால், வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்படும்.

‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத் தின்கீழ் அக்டோபர் முதல் தடுப்பூசி கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஏப்ரல் இறுதி வரை 66.4 மில்லியன் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப் பூசிகளை மற்ற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பல நாடுகளுக்கு இலவசமாக வும், பல நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது. இதுவரை 93 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்று மதி செய்துள்ளது. வரும் மாதங்களில் மேலும் 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஏற்றுமதி சர்ச்சை

வெளிநாடுகளுக்கு கரோனா தடுப் பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு மத் திய சுகாதாரம், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட மத்திய அரசின் எந்த துறையும் தடை விதிக்கவில்லை. எனி னும், கரோனா 2-வது அலையின்போது தடுப்பூசி தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்ததால், அவற்றை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது குறிப் பிடத்தக்கது.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE