தமிழக அரசின் சார்பில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை, நம்மாழ்வார் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் தொடங் கியது. முதல் நாளில் அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
u வேளாண்மை மற்றும் சார்பு துறை களுக்கு பட்ஜெட்டில் ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
u அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சாகுபடி பரப்பை உயர்த்தி, விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ அறிமுகம். முதல்கட்டமாக, 2,500 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,245.45 கோடி நிதி ஒதுக்கீடு.
u நெல்லுக்கான கொள்முதல் விலை சாதாரண ரகத்துக்கு ரூ.2,015, சன்ன ரகத்துக்கு ரூ.2,060 என உயர்த்தப்படு கிறது. இதற்காக ரூ.319.38 கோடி ஒதுக்கீடு.
u விவசாயிகள் பம்பு செட்களுக்கு இல வச மின்சாரம் வழங்க மின்வாரியத் துக்கு ரூ.4,508.23 கோடி ஒதுக்கீடு.
u பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் விவசாயி களுக்காக காப்பீட்டு கட்டண மானி யத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி ஒதுக்கீடு.
u முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்கள் திட்டத்தின்கீழ் 70 சதவீத மானியத்தில், 5 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.114.68 கோடி.
u நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் உருவாக்கம்.
u பாரம்பரிய நெல் வகைகளை திரட்டி பாதுகாத்து விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகிக்க நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.
u பனை தொடர்பான பல்வேறு தொழில் களை ஊக்குவிக்க ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.
u பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி தேவை. ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை.
u கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்திக் கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.42.50, கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.150 வழங்குவதற்கு ரூ.178.83 கோடி.
u மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச் சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய வேளாண் உபகரணங்கள் தொகுப்பு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
u கடலூர் மாவட்டத்தில் பலாவுக்கான சிறப்பு மையம்.
u மழைநீரை சேமித்து பயிர் உற்பத்தியை பெருக்க 500 பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
u 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கான கு புதிய மின் மோட் டார், பம்பு செட் வாங்க ரூ.10 ஆயிரம் வீதம் ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி.
u தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி.
u கிண்டியில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்.
u தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக் குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங் கைக்கான ஏற்றுமதி மண்டலம் உருவாக்கம்.
u வேளாண்மை பற்றி இளையதலை முறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் சென்னையில் வேளாண் அருங்காட்சியம்.
u கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
u உணவு பதப்படுத்துவதற்கான தனி அமைப்பு.
u தமிழ் வழி பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்.
u திருச்சி - நாகப்பட்டினம் மாவட்டத் துக்கு இடையிலான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தட மாக அறிவிப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(மேலும் வேளாண் பட்ஜெட் செய்திகள் உள்ளே…)
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago