ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் உத்தரவு :

By செய்திப்பிரிவு

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழ புரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழ னால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இது, முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப் பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது.

அண்மையில் ஐக்கியநாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன மான யுனெஸ்கோ உலக புராதன பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள் ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை கண்டுகளிக்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆடி மாத திருவாதிரை விழாவானது, அப்பகுதியில் வாழும் மக்களால் வெகு விமரிசையாகவும், சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப் படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி மக்கள், வர லாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல் வேறு அமைப்பினர் சார்பில் பல ஆண்டு களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிர கதீஸ்வரர் ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறையின் சார்பில் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நிலவி வரும் கரோனா தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்