தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் - ஆக.2-ல் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா : குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியர சுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத் தின்கீழ், சென்னை மாகாண சட்டப் பேரவை 1921-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. மூன்றாண்டு ஆயுள்காலத்தை கொண்ட இந்தப் பேரவையில் ஆளு நரால் நியமிக்கப்பட்ட 34 பேருடன், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 132 உறுப்பினர்கள் இருந்தனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி களை கொண்ட முதல் சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை தொடங்கப்பட்டு தற்போது 100 ஆண்டு கள் நிறைவு பெற்றுள்ளது. இதை நினைவுகூரும் வகையில் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன், சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில், தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை பேரவையில் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். விழாவுக்கு வர குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததாகவும், அவரது தேதி அளித்ததும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 1 முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அப்போது, சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம், சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு மருத்துவமனை, சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட உள்ள நினைவுத்தூண் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்க உள்ள தாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா குறித்து செய்தியாளர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார். விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை ஏற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இந்நிகழ்ச்சிகளை பேரவை செயலகத்தின் மூலம் நடத்துவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் பங்கேற்க முக்கியப் பிர முகர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி உடனிருந்தார்.

நூற்றாண்டு விழாவுக்காக தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டப் பேரவை கூட்ட அரங்கில் இருக்கைகளை மாற்றி, மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

உதகையில் ஓய்வு

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி குடியரசுத் தலைவர் உத கைக்கு வருகிறார். இதுகுறித்து உதகை ராஜ்பவன் அதிகாரிகள் கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் ஓய்வுக்காக ஆகஸ்ட் 3-ம் தேதி உதகைக்கு வரு கிறார். இங்குள்ள ராஜ்பவனில் தங்கு கிறார். அவரது வருகையையொட்டி பாது காப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட் டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்