திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்த மான 18 இடங்களில் வருமானவரித் துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் திமுக வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய் வதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருவண்ணா மலை வந்தார். அவர், எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் தங்கினார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தங்கி யிருந்த வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங் களில் சோதனை நடத்த வருமானவரித் துறையினர் நேற்று வந்துள்ளனர். தேர் தல் பிரச்சாரத்துக்கு மு.க.ஸ்டாலின் புறப் பட்டுச் சென்றதும், அவர்கள் சோத னையை தொடங்கியதாகக் கூறப்படு கிறது.
கல்லூரி வளாகத்தில் உள்ள எ.வ.வேலு வீடு மற்றும் அவரது அறக்கட்டளை மூலம் செயல்படும் கல்வி நிறுவனங்கள், விருந் தினர் மாளிகை, சென்னை மற்றும் சே.கூட லூரில் உள்ள வீடுகள், தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தில் உள்ள கிரா னைட் நிறுவனம், கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் உட்பட 18 இடங்களில் வருமானவரித் துறையினர் சுமார் 70 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை ஆழ்வார் பேட்டை நாத் நகரில் உள்ள அவரது வீட்டிலும் நேற்று காலையில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் மாலை வரை சோதனை செய்து ஏராளமான ஆவணங் கள், சில பென்டிரைவ், ஹார்டுடிஸ்க்கு களை எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில், பிரச்சாரத்தை முடித் துக் கொண்டு, விருந்தினர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் பகல் 12.20 மணிக்கு திரும்பி உள்ளார். பின்னர், அவர் தங்கி யிருந்த அறை மற்றும் காரில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின் னர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிரச்சாரம் செய்வதற்காக, மாலை 4.35 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் வரை சென்று எ.வ.வேலு வழி அனுப்பி வைத்துவிட்டு திரும்பினார்.
அதேநேரத்தில், வருமானவரித் துறை யினர் சோதனை தொடர்கிறது. மு.க.ஸ்டா லின் பிரச்சாரம் செய்யும்போது, எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், திருவண்ணா மலை நகரில் நேற்று மாலை நடைபெற இருந்த தேர்தல் பிரச்சாரத்தை எ.வ.வேலு ரத்து செய்து விட்டார்.
ரூ.500 கோடி பைனான்ஸ்
இந்நிலையில் வருமானவரித் துறை யின் சோதனைக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியான ஆடியோவே காரணம் என கூறப்படுகிறது. கட்சி பிரமுகருடன், திருவண்ணாமலை மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன் (ஆடியோ வெளியான பிறகு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) பேசியதாக வெளியான ஆடியோவில், “எ.வ.வேலுவுக்கு 8 கல்வி நிறுவனம், தமிழ கத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின் னிங் மில், கிரானைட் கம்பெனி உள்ளது. கரூரில் ரூ.500 கோடி முதலீட்டில் பைனான்ஸ் செய்கிறார். திரைப்படங் களுக்கு பைனான்ஸ் செய்தும், படவிநியோ கஸ்தராகவும் உள்ளார். டிவி தொடர் எடுக்கிறார்” என பட்டியலிட்டுள்ளார். ஆடியோ தொடர்பான குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு மறுப்பு தெரிவித்து தன்னிலை விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டி பார்க்கும் பாஜக
இருப்பினும், ஆடியோவில் வெளியான சொத்துப் பட்டியல் குறித்து வருமானவரித் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வருமானவரித் துறையினர் கூடுதல் தகவல்களை திரட்டி வந்துள்ளனர். அதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதால், சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதனை மறுக்கும் எ.வ.வேலு ஆதரவாளர்கள், அரசியல் உள்நோக்கத்துடன், வருமானவரித் துறையை அனுப்பி வைத்து பாஜக மிரட்ட நினைக்கிறது என்கின்றனர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவை எதிர்த்து பாஜக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் எ.வ.வேலுவை மையமாக கொண்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த புகாரும் வருமானவரித் துறைக்கு சென்றுள்ளது. இதுவும் இங்கு சோதனை நடைபெற காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி யுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago