அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு, நிலம் இல்லா தவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி யில் அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியதாவது: அதிமுக அரசைப் பற்றி ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி, மக்களைக் குழப்பி வருகிறார். காவிரிப் பிரச்சினையை தான் தீர்த்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஜெயலலிதா அரசுதான் காவிரி பிரச்சினையைத் தீர்த்தது.
ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது திமுக. காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது அரசித ழில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட்டிருந்தால் காவிரி பிரச்சினை தீர்ந்திருக்கும். பல்வேறு போராட்டத்துக்கு இடையே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அதிமுக அரசுதான் அரசிதழில் வெளி யிட்டது. ஸ்டாலின் சொல்கிற பொய் எடு படாது. ஒரு முதல்வரை எப்படி பேச வேண்டும் என்பதுகூட ஒரு கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை.
ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல்?
முப்பாட்டன் காலத்தில் இருந்து விவசாயம் செய்து வருகிற குடும்பத்தைச் சேர்ந்த நான் ’ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொள்வதில் ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல் வருகிறது, டெல்டா மாவட்டங் களில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டத்தை திமுகதான் கொண்டு வந்தது. ஸ்டாலின் இப்போது போராட்டம் நடத்தி விவசாயிகளை ஏமாற்றி வரு கிறார். அதிமுக அரசு தனிச்சட்டம் இயற்றி டெல்டா பகுதியை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறி வித்துள்ளது. மழையிலும் வெயிலிலும் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். விவசாய நிலத்தைப் பார்க்க சிமென்ட் ரோடு போட்டு சென்று பார்த்த ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?
ரூ.242 கோடிக்கு நிவாரணம்
தமிழகத்தில் வறட்சி நிவாரணமாக முதன்முதலில் ரூ.242 கோடிகொடுத்தது அதிமுகவின் ஆட்சி. இந் தியாவிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு அதிக நிவாரணம் கொடுத் துள்ளது அதிமுக அரசு. இந்தப் பகுதி யில் பருவம் தவறி ஜனவரி மாதத்தில் மழை பெய்தது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தகுந்த இழப்பீட்டை அதிமுக அரசு வழங்கி உள்ளது. ‘உழவன் செயலி’ மூலம் விஞ்ஞான முறை திட்டங்களை விவ சாயிகள் அறிந்து கொள்கிறார்கள்.இது எல்லாம் ஸ்டாலினுக்கு தெரி யாது. பொய் சொல்ல மட்டும்தான் அவருக்குத் தெரியும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும், இந்திய அளவில் முன் மாதிரி திட்டங்களை அறிவித்து முன்மாதிரி அரசாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு பேசினார்.
இதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதி யில் செல்வி ராமஜெயத்துக்கும், கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் துக்கும் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியனுடன் சென்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago