போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

By செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று நடந்த முத் தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போக்குவரத்து தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தம் தற் காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்து துறையில் பணியாற்றும் 1.30 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை.

எனவே, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள் ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட் டங்கள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. 3 நாட்களாக போராட்டம் நீடித்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, சென்னையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற் றது. தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் லட்சுமி காந்தன் முன்னிலை யில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன், போக்குவரத்துக் கழகத்தின் தலைமை செயலக சிறப்பு அலுவலர் ஜோசப் டயாஷ் மற்றும் தொழிற்சங்கங்கள் தரப்பில் நடராஜன் (தொமுச), அ.சவுந்தர ராசன் (சிஐடியு), ஆர்.ஆறுமுகம் (ஏஐடியுசி) உள்ளிட்ட 9 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில், போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு இடைக் கால நிவாரணத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும், போராட்டம் நடத்தப்பட்ட 3 நாட்களுக் கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிர்வாகம் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம லுக்கு வந்ததால் போராட்டத்தை திரும் பப் பெற வேண்டும் என நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்ட கட்சித் தலைவர் களும் தேர்தல் நடத்தை விதிமுறை களை சுட்டிக்காட்டி போராட்டத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண் டனர். இதனால் வேலைநிறுத்தப் போராட் டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற் றுள்ளோம். புதிய அரசு அமைந்தவுடன், எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என் றனர்.

வழக்கம்போல் பேருந்துகள் ஓடும்

இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களில் கணிசமானோர் நேற்று இரவு முதலே பணிக்கு திரும்பி விட்டனர். அதன்படி, வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இருப்பினும், இன்று முதல் வழக்கம்போல் முழு அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்