ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டது மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளது. இம்மாநிலங் களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணை யம் தயாராகி வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளி யாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும் அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பயணம் செய்தார். மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இத்தனை ஆண்டுகளாக இந்தப் பிராந்தியம் அதன் போக்கில் விடப்பட்டிருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. இங்கு உண்மையான மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும். மிரட்டி பணம் பறிக்கும் அரசியல் இருக்கும் வரை மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமில்லை. அநீதி எங்களுக்குத் தேவையில்லை. நாங் கள் உண்மையான மாற்றத்தை விரும்புகிறோம். மேற்கு வங்கத்தை ஆட்சி செய்தவர்கள், மாநிலத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள னர். தாய், நிலம் மற்றும் மக்கள் என்று முழங்குவோர் மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

மேற்குவங்க மக்களுக்கு குடிநீர் வழங்க திரிணமுல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. குடிநீர் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடிக்கு அனு மதி அளித்தது. ஆனால் ரூ.609 கோடி மட்டுமே திரிணமூல் அரசு செலவிட் டுள்ளது. மீதமுள்ள பணத்தை அவர்களே வைத்துள்ளனர். தண்ணீ ருக்கு தவிக்கும் மக்கள் பற்றி இவர் கள் கவலைப்படவில்லை. இவர்கள் தான் வங்காளத்தின் புதல்விகளா?

பணம் பறிக்கும் திரிணமூல்

வங்கிக் கணக்குகளுக்கு மத்திய அரசு நேரடியாக பணம் அனுப்புகிறது. ஆனால் மிரட்டிப் பணம் பறிக்கும் திரிணமூல் கட்சியினர் அதை மாநில அரசின் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த மனோபாவம் தான், விவசாயி களை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி யுதவி பெறவிடாமல் தடுத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக, அசாம் மாநிலம் தெமாஜி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த அவர், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து திரளான மக்கள் மத்தியில் அவர் பேசும்போது, “நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசுகள், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு பிராந்தியத்தை புறக்கணித்து விட்டன. டெல்லியில் இருந்து திஸ்பூர் வெகு தொலைவில் இருப்பதாக ஆட்சி யாளர்கள் கருதினர். ஆனால் தற்போது டெல்லி இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. உங்களுக்கு மிக அருகில் உள்ளது. அசாமின் வடக்குப் பகுதியை முந்தைய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. இப்பகுதியில் சாலை இணைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது. இப்பிராந்தியத்தை வளர்ச்சி அடையச் செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது” என்றார்.

பாதுகாப்புத் துறையில் மத்திய பட்ஜெட் திட்டங்களை திறம்பட செயல் படுத்துவது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு நாட்டில் நூற்றுக்கணக்கான ஆயுதத் தொழிற்சாலைகள் இருந்தன. இரு உலகப் போர்களின்போதும் இங் கிருந்து பெருமளவு ஆயுதங்கள் ஏற்று மதி ஆகின. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு காரணங்களால் இந்த அமைப்பு வளர்ந்திருக்க வேண்டிய அளவுக்கு பலப்படுத்தப்படவில்லை. சிறிய ஆயுதங்களுக்கு கூட நாம் பிற நாடுகளை எதிர்பார்க்க வேண்டி யுள்ளது. ராணுவ தளவாட இறக்கு மதியில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. மேலும் இந்திய மக்களுக்கு ஆற்றலோ திறமையோ இல்லை என்பது இதற்கு பொருள் அல்ல. கரோனா வைரஸ் காலத்துக்கு முன்பு இந்தியா வெண்ட்டிலேட்டர்கள் தயாரிக்கவில்லை. ஆனால் தற் போது ஆயிரக்கணக்கில் வெண்ட்டி லேட்டர்களை தயாரிக்கிறது.

செவ்வாய் கிரகத்தை அடையக் கூடிய இந்தியாவால் நவீன ஆயுதங் களையும் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதே நமக்கு எளிய வழியாக இருந்தது. இந்த நிலைமையை மாற்ற இந்தியா தற்போது கடுமையாக உழைத்து வரு கிறது. ராணுவத் தளவாட உற் பத்தியில் திறனை மேம்படுத்தவும் அத்திறனை விரைவாக மேம்படுத்திக் கொள்வதிலும் இந்தியா உறுதியாக உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்