பேரறிவாளன் விடுதலை தொடர் பாக தமிழக ஆளுநர் 7 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறைதண்டனை அனு பவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.
ஏற்கெனவே இந்த வழக்கு விசா ரணைக்கு வந்தபோது பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடு தலை செய்ய தமிழக அமைச் சரவை கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப் பது வருத்தமளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் விடு தலை தொடர்பாக தமிழக அமைச் சரவை நிறைவேற்றிய தீர்மானத் தின் மீது தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு உறுதியளித்தது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசா ரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலில், இந்த விவகாரம் தொடர் பாக தமிழக ஆளுநர் 4 வாரங்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரி விக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பேரறிவாளன் தரப்பில், மத்திய அரசு தெரிவித்த 4 நாட்கள் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவில் 4 வாரங்கள் எனக் குறிப் பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் முன்பாக நேற்று மீண்டும் முறை யீடு செய்யப்பட்டது.
அப்போது மத்திய அரசின் சார் பில் ஆஜரான சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, இந்த விவ காரத்தில் ஏற்கெனவே மத்திய அரசு உறுதியளித்துள்ளபடி தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மீண்டும் உறுதியளித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், பேரறி வாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் 7 நாட்களில் முடிவு எடுக்க வேண் டும் என உத்தரவிட்டு, விசா ரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
முடிவெடுக்க வேண்டிய கட்டாயம்
இதன்மூலம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago