தமிழகத்தில் தேசிய ஜனநாய கக் கூட்டணியின் பெரிய கட்சி என்பதால் முதல்வர் வேட் பாளரை அதிமுகவே தீர் மானிக்கும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட் பாளராக பழனிசாமியை அக் கட்சி அறிவித்தது. ஆனால் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; தமிழகத் தில் அதிமுக- திமுக இடையே தான் போட்டி’’ என தெரி வித்தார்.
இந்தச் சூழலில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி ரவி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். வரக் கூடிய தேர்தலில் பாஜகவுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன். தமிழகத்துக்காக பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை கொடுத்து வரு கிறார். இவ்வாறு கூறினார்.
அப்போது அவரிடம் முதல் வர் வேட்பாளர் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘தமிழக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல் வமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன் னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருப்பதாக கூறி யுள்ளனர். எனவே, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் கருத்தை நாங் கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, நாங்கள் சிறிய கட்சி. எனவே முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்’’ என்றார்.
முதல்வர் வேட்பாளர் குறித்த பாஜகவினரின் சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சி.டி ரவி கூறியுள்ளது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago