ஆந்திராவில் டிப்பர் லாரி மீது கார்கள் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு செம்மரங்களை கடத்தி வந்தபோது விபத்தில் சிக்கினர்

By என். மகேஷ்குமார்

ஆந்திராவில் டிப்பர் லாரி மீது 2 கார்கள் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந் தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வந்தபோது இந்த கோர விபத்தில் சிக்கினர். 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, நெல்லூர்,கர்னூல் ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் செம்மரங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிலர், இந்த மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதி காலை 3.30 மணி அளவில், கடப்பா - தாடிபத்திரி சாலையில் செம்மரங்களை கடத்திக் கொண்டு சென்னைக்கு 2 கார்கள் சென்று கொண்டிருந்தன.

கடப்பா விமான நிலையம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த 2 கார் களும் முன்னால் சென்று கொண்டி ருந்த டிப்பர் லாரி மீது வேகமாக மோதின. லாரியின் டீசல் டேங்கர் மீது கார்கள் மோதிய தால் மூன்று வாகனங்களிலும் தீப் பிடித்தது. கார்களில் வைக்கப்பட் டிருந்த செம்மரங்களும் எரிந்து சாம்பலாயின.

தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள்ளாக, கடத்தல்காரர் கள் ஓட்டி வந்த காரில் இருந்த 4 பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மற் றொரு காரில் இருந்த 3 பேர் படு காயங்களுடன் கடப்பா அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

உயிரிழந்த 5 பேரும் சேலம் மற் றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், படுகாய மடைந்தவர்களும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என போலீ ஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்