ட்டிப் பையன் ரமணா (வயது 8) புத்தகக் காட்சியின் மிக மிக இளம் வயதுப் படைப்பாளி. ரமணாவின் ‘சிம்பாவின் சுற்றுலா’ (வானம் வெளியீடு) என்ற சிறார் நாவல் வெளியானபோது, அவனுக்கு வயது 6-தான். இப்போது ரமணாவின் இரண்டாவது புத்தகமான ‘நீல தேவதை’ (வானம் வெளியீடு) என்ற சிறார் கதைகள் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
“எங்கள் வீடு கதைகளால் ஆனது. இரவில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வோம். மூத்தவள் ரமணிக்கு 10 வயது இருக்கும்போது ‘யாருக்குத் தைக்கத் தெரியும்’ என்ற கதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. குடும்பத்தில் இரண்டாவது சிறார் படைப்பாளியான ரமணா சொல்லச் சொல்ல, ரமணி எழுதிய நாவல்தான் ‘சிம்பாவின் சுற்றுலா’. இப்போது அவனே படிக்கவும் எழுதவும் ஆரம்பித்திருக்கிறான். தற்போது வெளியாகியிருக்கும் ‘நீல தேவதை’ புத்தகத்தில் உள்ள 5 கதைகளில் மூன்று கதைகள் அவன் எழுதியவை. இரண்டு கதைகள் அவன் சொல்லி, ரமணி எழுதியவை” என்கிறார் இந்த இரண்டு குழந்தைகளின் தாயார் அனிதா. இவர் ரயில்வண்டி சிறார் குழுமத்தின் கதைசொல்லியாக இருக்கிறார்.
கிடார் வாசிக்கும் ஆப்பிள், மீன் காய்க்கும் மரம், கடற்கன்னிகள், போர் புரியும் பழங்களும் காய்கறிகளும், பிரெட்டில் ஜாம் தடவிச் சாப்பிடும் தாமஸ் ரயில் என்று கற்பனையும் குழந்தைமையும் ததும்பும் உலகம் ரமணாவுடையது. அவன் உலகத்தில் ஆனந்தமாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட கதைகளாய்ப் படைக்கிறான் அந்தக் குழந்தை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago