பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற ‘மகாமுனி’ திரைப்படத்தைப் புத்த சமயக் கருத்தியல் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதிய பதிப்பாளர் அ.அமரேசன் அதன் திரைக்கதையை நூலாக்கி வெளியிட்டுள்ளார்.
மகாமுனி திரைக்கதை
எழுத்து-இயக்கம்: சாந்தகுமார்
அறம் பதிப்பகம், முள்ளிப்பட்டு கிராமம் - 632 316
விலை: ரூ.390, தொடர்புக்கு: 9150724997
இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான ஹெரால்ட் ரஸ்ஸல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய கதையைத் தன்வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதினார். 1954-ல் அப்துற்-றஹீம் வெளியிட்ட அதன் தமிழாக்கம் 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றி என் கைகளிலே
ஹெரால்ட் ரஸ்ஸல், தமிழில்: அப்துற்-றஹீம்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை - 17
விலை - ரூ.100
பதப்படுத்தப்பட்ட உணவுகளின் படையெடுப்புக்கு இடையே இயற்கையின் கொடைகளான பழங்களைச் சாப்பிடுவதால் விளையும் மருத்துவப் பயன்களை விளக்கும் நூல் இது. ஆப்பிள் முதல் விளாம்பழம் வரை பல பழங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.
பழங்களும் அதன் மருத்துவப் பயன்களும்
குமுதா சாந்தாராமன்
சரண் புக்ஸ், சென்னை – 17
விலை: ரு.110, தொடர்புக்கு: 9789913700
சிறுவர் விளையாட்டுகள், இளையோர் விளையாட்டுகள், முதியோர் விளையாட்டுகள், திருவிழா விளையாட்டுகள் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும் முறை, அவற்றுக்குத் தேவைப்படும் பொருட்கள் போன்ற தகவல்கள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
நவீன விளையாட்டுகளுக்கு வித்தாகும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்
தொகுப்பாசிரியர்கள் - அ.பழனிச்சாமி, ல.கருப்பையா
வசந்தா பதிப்பகம், சென்னை - 600 088
விலை - ரூ.250, தொடர்புக்கு: 044-22530954
தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் காமன்வெல்த் கூட்டமைப்பு, உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆகியவை இந்திய மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகைகள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கும் நூல்.
இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு
எம்.ஞானசேகர், ஜி.அப்பாவு, சிஏ.ஏ. ஜான் மோரீஸ்
யுனிவர்சல் கிங்டம் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 116,
விலை - ரூ.100, தொலைபேசி: 87758 95229
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago