வருமான வரி செலுத்துபவர்களுக்கு அநியாய அபராதம் :

By செய்திப்பிரிவு

வருமான வரியின் வலைத்தளம் மாற்றியமைக்கப்படுவதற்காக ஜூன் மாதம் முதல் வாரம் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டது. புதிய தளம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்டது என்று பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அது நடைமுறையில் ஏராளமான பிரச்சினைகளை உருவாக்கியது. பல முறை முயன்றாலும் வலைத்தளத்தில் நுழைவதே பெரும் சவாலாக உள்ளது. பல நிறுவனங்கள் ஏப்ரல் 30-க்கு முன்பாகத் தங்கள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஃபார்ம்-16-ஐ, ஜூன், ஜூலை மாதங்களில்தான் வழங்கின. இந்தச் சூழலில், பெருந்தொற்றையும் கணக்கில் கொண்டு, வருமான வரிக் கணக்கு சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜீலை 31-லிருந்து செப்டம்பர் 30-க்குத் தள்ளிவைத்தது ஒன்றிய அரசு. ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது மிக மோசமான முன்னுதாரணமாகும். நேர்மையாக வரி செலுத்துபவர்களை, குறிப்பாக மாதச் சம்பளம் பெறுபவர்களைத் தண்டிக்கும் செயலாகும். இதை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

- சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்