குரியனின் சால்புகள் :

By செய்திப்பிரிவு

சி.டி.குரியனின் 90-வது பிறந்த நாளையொட்டி பி.ஜி.பாபு எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்குப் பாராட்டுகள். எம்ஐடிஎஸ் கருத்தரங்கு ஒன்றில், கல்வியானது சமூக மாற்றத்தை உண்டாக்கும் என்று எனது கட்டுரையைத் தொடங்கியிருந்தேன். அப்போது, “கல்வியால் சமூக மாற்றமா? சமூக மாற்றத்தால் கல்வி வளர்ச்சியா?” என்ற வினாவை எழுப்பி, “கல்வியால் சமூக மாற்றம் அடைந்த ஒரு நாட்டைக் குறிப்பிட முடியுமா?” என்று வினா எழுப்பினார் குரியன். பொதுவாக உள்ள கருத்தின் அபத்தத்தை வெளிப்படுத்தினார். தெளிவான சிந்தனை, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஆகியவை அவரது சால்புகள்.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்