ஆசிரியர்கள் அடிமைகள் அல்ல :

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகள் பற்றி எஸ்.உமாமகேசுவரி எழுதிய புத்தகம் தொடர்பான அறிமுகக் கட்டுரையை ‘நூல்வெளி’ பகுதியில் படித்தேன். நான் மாவட்டக் கழகப் பள்ளிகளில் 6 ஆண்டுகள் ஆசிரியராகவும், 10 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் இருந்த பின் அந்தப் பள்ளிகளைக் கல்வித் துறை எடுத்துக்கொண்டதும் பணி விலகி, தனியார் பள்ளிக்குச் சென்றேன். அதற்கு அடிப்படைக் காரணம், கல்வி அதிகாரிகளின் அணுகுமுறையே ஆகும். கல்வி அளிப்பில் ஆசிரியர்கள் பங்கேற்பாளர்கள் என்ற நிலையினின்று ஊழியர்கள் என்ற நிலைக்கு மாற்றப்பட்டு மேலே (!) இருந்து வரும் கட்டளைகளை வினா எழுப்பாது செயல்படுத்த வேண்டும் என்பது என் போன்றோருக்கு ஏற்புடையதல்ல. பல புதுமைகளைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்திச் சிறந்த தலைமையாசிரியராகக் கருதப்பட்டேன். ஆண்டான் - அடிமை உறவில் கல்வி வளராது என்பதை அதிகாரிகள் அறியாதுள்ளனர். எங்கு சுதந்திரம் இருக்கிறதோ அங்கு புதுமை வளரும்.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்