ஒருகாலத்தில் ‘வடஇந்தியாவின் பிராமண - பனியா கட்சி’ என்று சொல்லப்பட்டுவந்த பாஜகவின் முகம் மோடி - ஷா காலகட்டத்தில் குறைந்தபட்சம் மேல்பூச்சு அளவிலேனும் மாறியிருப்பதை அதன் எதிரிகளும் ஒப்புக்கொள்வார்கள்

By செய்திப்பிரிவு

ஒருகாலத்தில் ‘வடஇந்தியாவின் பிராமண - பனியா கட்சி’ என்று சொல்லப்பட்டுவந்த பாஜகவின் முகம் மோடி - ஷா காலகட்டத்தில் குறைந்தபட்சம் மேல்பூச்சு அளவிலேனும் மாறியிருப்பதை அதன் எதிரிகளும் ஒப்புக்கொள்வார்கள். கட்சிக்குள் சமூகங்களுக்கு இடையிலான பொறுப்புப் பகிர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கேள்வி என்னவென்றால், உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?

தலைமைப் பொறுப்புக்கு நீங்கள் வந்த ஒரு வருட காலத்திலேயே தேர்தலை எதிர்கொள்கிறீர்கள். எப்படியிருக்கிறது அனுபவம்?

தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கான முடிவுகள் தமிழ்நாட்டுத் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள். தேசியக் கட்சிகள் இங்கு எடுபடாமல் போக டெல்லியிலிருந்தே அவை ஆட்டுவிக்கப்படும் நிலை ஒரு முக்கியமான காரணம். இன்றைய பாஜகவில் மாநில அமைப்புகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் எந்த அளவுக்கு இருக்கிறது?

தமிழ்நாட்டு பாஜக தலைவர்களால் பிரதமரையோ, கட்சியின் தேசியத் தலைவர்களையோ எளிதாக அணுக முடிகிறதா? மோடி, அமித் ஷா, நட்டாவுடன் எத்தனை முறை உங்களால் இந்த ஓராண்டில் கலந்து பேச முடிந்திருக்கிறது?

அமித் ஷாவுடன் கணிசமான நேரம் செலவிட்டிருக்கிறீர்கள்; அவர் சொன்ன எந்த ஆலோசனை முக்கியமானது என்று கருதுகிறீர்கள்?

நீங்கள் எந்த அளவுக்கு வாக்குச்சாவடிக் குழு அமைப்பில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்?

வெளியே தேசியம், இந்துத்துவம் பேசினாலும், மோடி – ஷா இருவருமே ஒருபோதும் குஜராத்தை விட்டுக்கொடுக்காதவர்கள்; குஜராத்தி அடையாளத்தையும் பெருமிதத்தையும் குஜராத்தி லாபியையும் தங்கள் வெற்றிக்கான கச்சாப்பொருளாகக் கொண்டவர்கள். கடைசியாக நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில்கூட ‘குஜராத்தி அரசியல்’ மோடியின் பிரச்சார ஆயுதங்களில் பிரதானமானதாக இருந்தது. இந்துத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக பாஜக, தமிழ் அரசியலுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறதா?

நான் தேசிய அளவிலான விவகாரங்களில் நம்முடைய மாநிலத்தின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் பற்றிக் கேட்கிறேன்... நீட், எய்ம்ஸ் போன்ற விஷயங்களில் உங்களுடைய அணுகுமுறை இனி எப்படி இருக்கும்?

அரசியல் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, திராவிட இயக்கம் இந்த நூறாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு சமூகநீதிப் பாதையை உருவாக்கியிருப்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டே செயலாற்ற வேண்டும்; அப்படியென்றால், இந்த விஷயத்தில் பாஜகவின் செயல்திட்டம் என்ன?நீங்கள் சொல்வதுபோல, நூறு வருஷங்களில் சமூகநீதிப் பாதையில் இங்கே நிறைய நடந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது ஓரிடத்தில் கெட்டிதட்டி நிற்கிறது. முக்கியமாக அடித்தட்டு மக்கள் இருக்குமிடம் வரை அது செல்லவில்லை. திமுகவில் கட்சித் தலைவராக ஒரு தலித் உட்கார முடியுமா? உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒரு தலித் உட்கார்ந்ததையே ‘அது நாங்கள் போட்ட பிச்சை’ என்றுதானே பேசுகிறார்கள்? இப்படிக் கெட்டிதட்டி நிற்கும் சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு அடித்தட்டு மக்களை நோக்கிக் கொண்டுசெல்வோம். அதுதான் பாஜகவின் செயல்திட்டமாக இருக்கும்.வாக்குச்சாவடி அளவில் அமைப்புகளைக் கட்டியெழுப்புவது தொடங்கி அடித்தட்டு மக்களை அதிகாரப்படுத்துவது வரை நீங்கள் ஆக்கபூர்வமாகப் பேசும் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஆனால், கட்சியை வளர்க்கிறேன் என்ற பெயரில் ரௌடிகளைக் கட்சியில் இணைப்பது தொடங்கி பிற கட்சிகளிலிருந்து ஆட்களைத் தூக்குவது வரையிலான உங்களுடைய நடவடிக்கைகளை எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணிக் கட்சிகளின் கைகளை முறுக்குகிறீர்கள் என்ற பேச்சு வெளிப்படையாகக் கேட்கிறது. தேர்தலுக்குப் பின் கட்சிகளை உடைத்து ஆட்சிக்கு வர பாஜக முனையும் என்ற எண்ணம் திமுக – அதிமுக இரு கட்சியினரிடமுமே இருக்கிறது...

ஒவ்வொரு தலைவருக்கும் தன்னுடைய சமூகம் சார்ந்து ஒரு கனவு இருக்கும். தமிழ்நாடு தொடர்பான உங்களுடைய கனவு என்ன?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்