சமூக மேம்பாட்டில் குழந்தைகள் நலன், கல்வி போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், முதியோர்களுக்கான முதியோர் கல்வி, ஆதரவற்றோர்/ முதியோர் காப்பகங்கள் ஏற்படுத்துதல், ஏற்கெனவே இருப்பவற்றை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு தொடர்பான அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இளைஞர்கள் மது, போதைப் பொருள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தடுத்து விளையாட்டு, கலை, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வழியாக அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு.
- க.சுடலையாண்டி மாரி, ரயில்வே ஊழியர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago