அரசு ஆணைகள் பலவும் எழுத்தில் மட்டுமே உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனப்போக்கு இருக்கக் கூடாது. சாதாரண மனிதன் அனுப்பும் எந்தவொரு கோரிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கையை உரிய காலத்துக்குள் எடுக்கப்பட வேண்டும். இன்னும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்இணைப்பு வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே சில சமயம் அதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அல்லது நிராகரிக்கப்பட்டதற்கு உரிய காரணத்தைக் கூறி பதில் தர வேண்டும். ஊழலற்ற, எளிமையான, வெளிப்படைத் தன்மையுள்ள நிர்வாகத்தை சாதாரண மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ஆ.கணேசன், திருச்செந்தூர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago