ஒரு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன் அந்த நிலப் பரப்பில் வாழும் மக்களிடம் முழுமையான ஒப்புதலைப் பெற வேண்டும். அரசுகள் சொல்வதைப் போல அந்தத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லையெனில், சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மூலமும் மக்கள் பிரதிநிதிகள் மூலமும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மக்களிடம் நெருங்கிச் சென்று திட்டங்களின் சாதக பாதகங்கள் குறித்து விளக்க வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் மக்களின் அனுமதியைப் பெற முடியவில்லையெனில், அதன் பிறகு, அந்தத் திட்டங்களை மக்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். நீதிமன்றங்கள் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும்போது தேவையில்லாத நிதிச்சுமைகள் உருவாகத் தொடங்கும். இதுவும் மக்களின் வாழ்வாதாரத்தில்தான் சிக்கலை ஏற்படுத்தும்.
- உ.ஸ்ரீராம், இதழியல் மாணவர், திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago