உதயசூரியனின் பார்வையிலே... :

By செய்திப்பிரிவு

திமுகவில் எம்ஜிஆர் இருந்த காலத்தில் தன் படங்களில் வரும் பாடல்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ திமுக பிரச்சாரத்தை நுழைத்துவிடுவார். அப்போதைய காங்கிரஸ் அரசின் அழுத்தத்தால் எம்ஜிஆர் பாடல்களின் பல வரிகள் தணிக்கைக்கு உள்ளாகியிருக்கின்றன. 1965-ல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. அதற்கு வாலி முதலில், ‘நான் அரசன் என்றால்/ என் ஆட்சி என்றால்/ இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்’ என்று எழுதியிருந்தார். தணிக்கைக் குழு இதை அனுமதிக்காது என்பதால், அந்த வரிகளை எம்ஜிஆர் மாற்றி எழுதச் சொன்னார். அப்படி எழுதப்பட்டதுதான் ‘நான் ஆணையிட்டால்/ அது நடந்துவிட்டால்’ என்ற வரிகள். அதேபோல் 1966-ல் வெளியான ‘அன்பே வா’ படத்தில் உள்ள ‘புதிய வானம், புதிய பூமி’ என்ற பாடலின் இடையே ‘உதயசூரியனின் பார்வையிலே/ உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே’ என்ற வரியை வாலி எழுதினார். அதைத் தணிக்கைக் குழு ஆட்சேபித்ததால் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று அந்த வரி மாற்றப்பட்டு திரைப்படத்தில் ஒலித்தது. ஆனால், இசைத்தட்டில் மாற்றப்படாததால் ‘உதயசூரியனின் பார்வையிலே’ வரியே எங்கும் ஒலித்தது. 1967 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்