அந்தியூர் அருகிலுள்ள கன்னப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்துவருகிறோம். மேட்டூர் அணையிலிருந்து 25 கிமீ, காவிரி ஆற்றிலிருந்து 8 கிமீ, மேற்குக் கால்வாயிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்திருந்தும் அவற்றால் எங்கள் பகுதிக்கு ஒரு பலனும் இல்லை. சராசரி ஆழ்துளைக் கிணறுகளின் ஆழமே 1,200 அடிகளைத் தாண்டிவிட்டது. மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு, வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டத்திலும் எங்கள் ஊர் சேர்க்கப்படவில்லை. அணைக்கட்டின் உபரி நீரைக் கொண்டு எங்கள் பகுதியின் வறண்ட ஏரிகளை நிரப்பினாலே குடிநீர் மற்றும் பாசன நீர்த் தேவைகள் பூர்த்தியாகிவிடும். அதுவும் இல்லாதபட்சத்தில் எங்கள் ஊரின் வழியாகவும் அருகிலும் செல்லும் விவசாயிகள் நீரேற்றுப் பாசனச் சங்கங்களின் ஆறுக்கும் மேற்பட்ட குழாய்களிலிருந்தாவது குறைந்தபட்ச நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். பாசன நீரில் பாரபட்சமும் பாகுபாடும் கூடாது.
- ஆர்.குணசேகரன், கன்னப்பள்ளி
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago