நிலையான வளர்ச்சி வேண்டும்! :

By செய்திப்பிரிவு

மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும்... குறிப்பாக தேசியக் கட்சிகள். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே வளர்ச்சி என்றால், அது புறக்கணிக்கப்பட்ட வளர்ச்சி. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதனதன் மண் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொகுதி வாரியாக மக்களோடு ஒன்றிணைந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதைத்தான் ஐநாவின் நிலையான வளர்ச்சிக் குறிக்கோள்கள் வலியுறுத்துகின்றன. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, நீர் சேமிப்பு, வாழ்வதற்கான எளிமையான கட்டமைப்பு, தொழில் வளம், எளிமையானதும் தூய்மையானதுமான எரிசக்திப் பயன்பாடு உள்ளிட்ட 30 குறிக்கோள்களை ஐநா பரிந்துரைத்திருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அடுத்த ஐந்தாண்டுகளில் தொகுதிவாரியாகச் செயல்படுத்த வேண்டும்.

- டி.தினேஷ், பி.எஸ்சி மாணவர், திருநெல்வேலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்