அதிகாரப் பகிர்வு வேண்டும்! :

By செய்திப்பிரிவு

ஒரு வாக்காளராக என்னுடைய வாக்கானது என் மாநிலத்தின் உரிமையைக் காப்பதற்காகப் பயன்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். புதிதாக அமையவிருக்கும் அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசும் கூட்டாட்சியின் தத்துவங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மாநிலங்கள் தொடர்பான முடிவுகளை டெல்லியில் இருந்துகொண்டு மட்டும் எடுப்பது பலன் தராததுபோல் உள்ளூர் சார்ந்த முடிவுகளை சென்னையில் இருந்துகொண்டு எடுப்பதுவும் பலன் தராது. புதிய அரசானது தனது அதிகாரங்களைக் குக்கிராமங்கள் வரை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

- மணிமுத்து, அம்பாசமுத்திரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்